சிலையும் கதையும்…

0

சிலையும் கதையும்…

ஈ.வே.ரா யார் தெரியுமா?
ஈ.வே.ராமசாமி என்ற பெரியார் 17 செப்டம்பர் 1879 ஈரோட்டில் பிறந்தார்.சமூக சீர்திருத்தவாதி, மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண் விரோதத்திற்கு போராடியவர். திராவிட கழகத்தை தோற்றுவித்தவர்.  இவரது சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு வாதம் போன்றவை தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளது. 24 டிசம்பர் 1973 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
திருச்சிராப்பள்ளியில் பெரியார் வாழும் பொழுதே மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் நின்ற நிலையில் உள்ள சிலை நிறுவப்பட்டது. சிலை அமைக்கப்பட்ட வரலாறு குறித்து திராவிட கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராஜ் கூறும் போது,


திருச்சியில் ஒரு அடையாளமாக இருப்பதுதான் ஈ.வே.ராமசாமி சிலையாகும். 17.09.1967 ஞாயிறு அன்று குன்றக்குடி அடிகளார், அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் ஆகியோர் ஈ.வே. ராமசாமியின் 89-வது பிறந்தநாளன்று இச்சிலையை திறந்து வைத்தனர்.

 

உயிருடன் இருக்கும் போது சிலையா!!..
காமராஜர் ஆட்சி செய்த போது, திருச்சி தான் தமிழ்நாட்டின் மையத்தில் உள்ளது என்றும் திருச்சி தான் மத்திய பகுதி என்பதால் சட்டசபையை திருச்சியில் அமைக்குமாறு பெரியார் கூறிவந்தார். திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையில் தான் ஐயா தங்கி, சக தோழர்களுடன் உரையாடி கொண்டிருப்பாராம்!. அந்த சமயத்தில் தான் தந்தை பெரியாருக்கு சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, சிலைஅமைப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். அப்போது உள்ள அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களும் சேர்ந்து ஐயாவுக்கு சிலை வைக்க வேண்டும் சொல்லி வேற இடத்த நியமித்தார்கள். அப்போ திருச்சி சேர்மன் லூர்துசாமி பிள்ளை ஆலோசனையின் படி ,”நீங்க இங்கெல்லாம் ஐயாவுக்கு சிலை வைக்கிறதுக்கு பதிலா,திருச்சிக்கே” மத்திய பேருந்து நிலையம்ன்னு ஒன்னு கொண்டுவர போறோம்”! நாங்க நகராட்சியில் தீர்மானம் ஒன்று போட்டு இருக்கோம்,அந்த பஸ் ஸ்டாண்டு எங்கே வரப்போகுதுனா,நம்ம! இப்ப இருக்கிற பஸ் ஸ்டாண்ட் காமிச்சு அந்த இடத்துல நீங்க சிலை வச்சா,பஸ் ஸ்டாண்ட் குள்ள நுழையும் போதும்’வெளிய வரும்போதும்,எந்த ஊர்ல இருந்து வந்தாலும் ஐயாவின் சிலையை பார்த்துட்டு தான் வரணும்,பார்த்துட்டு தான் போகணும்.”இதற்கு சிலை அமைப்பு குழு எல்லாம் ஆமோதித்து மத்திய பேருந்து நிலையத்தில் சிலை வேலைய ஆரம்பிச்சாங்க,

food


இந்த சிலையை ஐயா! உயிருடன் இருக்கும்போது, அவரின் கண்முன்னாடியே திறந்தாங்க,அப்போ முதலமைச்சர் காமராஜர் தான் திறந்து வைத்தார்.அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு சிலை வைத்தால் அவங்க செத்துப் போயிடுவாங்க! என்ற ஒரு மூடநம்பிக்கை இருந்தது.இதைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே உயிருடன் இருக்கும்போது ஐயாவுக்கு சிலை திறந்தாங்க.

சிலைக்கு கூண்டு போட்ட அரசாங்கம்?
தந்தை பெரியார் உலகம் போற்றும் தலைவராக இருப்பதனால் இன்றைய அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியால் கூலி ஆட்களை பயன்படுத்தி, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுதல்,செருப்பு மாலை போடுவதும் அவமதிப்பதுமாக இருந்து வந்தது. தப்பு செய்தவர்களை அரசாங்கம் விட்டுட்டு,பெரியார் சிலைக்கு கூண்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் பெரியார் சிலைக்கு கூண்டு போட்டு கொண்டிருக்கிறார்கள். திருச்சி மாநகராட்சியில் சிலைக்கு கூண்டு போடும் நோக்கமானது, கூண்டை விரிவாக ஒரு மணிமண்டபம் மாறி கட்டித் தருவோம் என்று கூறினார்கள்.இதனை திராவிட கழகம் ஒப்புக்கொண்டது.ஆனால் சிலையினுள் உள்ள ஐயாவின் முகம் இரவு நேரத்தில் தெரியாமையால் லைட் போன்ற சிறு சிறு வேலைபாடுகள் உள்ளன.

கூண்டை எதிர்க்கும் திராவிட கழகம்,
ஐயாவின் சிலைக்கு கூண்டு போட்டமையால் தி.க கட்சியினர் அதனை எடுக்க கூறி போராட்டம் நடத்தி ஸ்ரீரங்கத்திலுள்ள பெரியார் சிலையினை கூண்டு போடாமல் தடுத்து நிறுத்தினர்.மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கூண்டை அகற்றுமா! அல்லது மணி மண்டபம் அமைத்து கொடுக்குமா???
காத்திருப்போம்!!……

 சிவசங்கரி முகுந்தன்

gif 4

Leave A Reply

Your email address will not be published.