திருச்சியில் (16/02/2021) வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கறுப்புப்கொடி போராட்டம்

திருச்சியில் (16/02/2021) வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கறுப்புப்கொடி போராட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவீந்தராஜீலு வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதனால், பல்வேறு வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் இடிக்கப்பட உள்ளனர்.
இதனால், பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பழைய பால்பண்ணை துவங்கி துவாக்குடி வரை உயர்நிலை பறக்கும் மேம்பாலம் அமைக்க கோரி கடந்த 9ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம், ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதால், இதனை கண்டித்து நாளை 16.02.2021 பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் கறுப்பு கொடிகள் ஏற்றும் போராட்டம் நடைபெறும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி பால்பண்ணை துவங்கி துவாக்குடி வரையிலான கடைகள் அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றார்.
