அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் !

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கு பிப்ரவரி 24 முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.

மேலும் அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவிரும்புவோர்களுக்கு 5,000 ரூபாய், கேரள சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு 2000 ரூபாய் என்று விருப்ப மனு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
