திருச்சியில் சாலையோரம்  கிடந்த  முதியவர் உடலை நல்லடக்கம் செய்த  சமூக தன்னார்வலர்கள்

0
1 full

காசி காசி, இராமேஸ்வரம், சொர்க்கம் சேரு, கைலாசம் சேரு, காசி காசி மயானத்தில் மண் வெட்டும் மலையம்மாள் பாடலுடன் நல்லடக்கம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோஷ்ண நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து உள்ளார்.

2 full

இறந்த நபர் உடலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் இறந்த நபரின் தகவலை அரசு மருத்துவமனை காவல் நிலைய தலைமை காவலர் ஆனந்த் அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு 12-2-2021 வெள்ளிக்கிழமை மாலை தகவல் அளிக்கிறார். தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா, வினைசெய் அறக்கட்டளை கார்த்திக் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சென்றனர்.

இறந்த நபர் 60 வயது மதிக்கத்தக்கவர். கருப்பு நிறம். சுமார் ஐந்து அடி உயரம் இருப்பார். இடது விலா எலும்பில் மச்சமும், தோள்பட்டையில் தழும்பு அடையாளமும் காணப்படுகிறது. மீட்டு எடுக்கும் பொழுது அந்த நபரிடம் எவ்வித விலை உயர்ந்த பொருட்களோ, ஆபரணங்களோ கிடையாது. அரசு காவல் நிலைய எழுத்தர் பாலாஜி, தலைமை காவலர் ஆனந்த், தனியார் ஆம்புலன்ஸ் தன்னார்வலர்கள் சக்திவேல், பாலமுத்து, பிரபு உள்ளிட்டோருடன்

ஆதரவற்ற பிரேதத்தை மீட்டு திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் மயானத்தில் 12-2-2021 மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.