திருச்சி சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா…

Corona to a customs officer in Trichy ...

0
full

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி கடந்த 9-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அந்த பரிசோதனை முடிவு  கடந்த 11ம் தேதி இரவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

half 2

இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக தனி வாகனத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் பணியாற்றிய பகுதி உள்பட விமான நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் 12ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.