பாரதிதாசன் பல்கலை.யில் 11 இணையவழி பாடங்கள்

0
1 full

நாட்டில் உள்ள தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இணையவழி பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைநிலைக்கல்வி பணியகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு 11 இணையவழி பட்டப்படிப்புகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது.

கடந்த 12ம் தேதி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவின்போது, இணைய வழி கல்வியில் இளநிலை பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம், மற்றும் வணிக நிர்வாகவியல், ஆகியவையும் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்புகள் வழங்கப்படும் என துணைவேந்தர் ம.செல்வம் தெரிவித்தார்.

விழாவில் தொலைநிலைக்கல்வி மற்றும் இணைய வழி கல்வி மையத்தின் இயக்குனர் எட்வர்டு வில்லியம் பெஞ்சமின் வரவேற்று பேசினார். முடிவில் துணை பதிவாளர் கலா யோகநாதன் நன்றி கூறினார்

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.