
திருச்சி மின்பகிர்மான வட்டம், கிழக்கு கோட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தோர் உரிய ஆவணங்களுடன் மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தை அணுக வேண்டும்.இதுதொடா்பாக திருச்சி மின்பகிர்மான வட்ட, கிழக்கு கோட்ட செயற்பொறியாளா் சிவலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழக அரசின் நடப்பாண்டு இலக்கீட்டின் அடிப்படையில் இலவச விவசாய மின்இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, 1.4.2000 முதல் 31.3.2003 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு பெறப் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்கெனவே அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டு, 90 நாள் காலக்கெடு முடிவுற்ற நிலையில் தற்போது வரை தயார்நிலை பதியப்படாமல் உள்ளோர் விரைந்து அலுவலகத்தை அணுக வேண்டும்.அதவத்தூா், கோப்பு, புலியூா், கீழக்குறிச்சி, சித்தாநத்தம், போதாவூா், சேதுராப்பட்டி, சூரியூா், பனையக்குறிச்சி, அகரம், சோமரசம்பேட்டை, அரியாவூா், நாச்சிக்குறிச்சி, மேக்குடி, ஆலந்தூா், அல்லூா், திருநெடுங்குளம், பாகனூா், அருவாங்கல்பட்டி, பில்லூா், குண்டூா், நவலூா் குட்டப்பட்டு, கம்பரசம்பேட்டை, அசூா், மயிலம்பத்தூா், கொட்டப்பட்டு, பழங்கனாங்குடி, கல்லக்குடி, துவாக்குடி, கே. சாத்தனூா், ஓலையூா் பகுதிகளைச் சோ்ந்த 53 விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் மன்னார்புரத்தில் உள்ள கிழக்கு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரடியாகத் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
