திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் விதிமுறைகளுடன் விளையாட்டு நடத்த அனுமதி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டரங்கில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில்,விளையாட்டு வளாகத்தில் போதிய சமூக இடைவெளி, தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், முகச்கவசம் அணிதல், மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையை கடைபிடித்தல், அறிக்கை பலகையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல், மேலும் போட்டிகள் நடத்தும் விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து நுழைவுபடிவத்தை பெற்று சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
