வாழைக் கழிவுகளிலிருந்து விமான பாகங்கள்-்விஞ்ஞானி மயில்சாமி

திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் கடந்த 12ம் தேதி வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு ஆக்கப்பூர்வமான பொருட்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது
வாழை நாரை பிரித்து எடுத்த பிறகு உருவாக்கப்படும் கழிவுகளை ஒலி பேனல்கள் மற்றும் விமான பாகங்களை தயாரிக்க பயன்படுத்தலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் கார்பன் அளவைக் குறைப்பதற்கும் வாழைப்பட்டை சாறு ஒரு சிறந்த ஊட்டசத்தாக பயன்படுகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத்தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையும், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமாவும் கையெழுத்திட்டனர். இந்திய விவசாய பொறியியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரன் நாயக் பங்கேற்றார்.
