உங்களுக்காக ஒரு கதை… (மலர்களைக் கண்டு அழுத கவிஞன்..!!)

0

 

ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாக நடந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் வெடிப்புற்ற பாறையின் இடுக்கில் ஒரு மலர்ச்செடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

கவிஞர் அதைக் கண்டதும்,””சாட்டர்டன்…நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று கேட்டு கண்களில் நீர் ததும்ப அந்த மலர்ச்செடியை பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

‌சந்தா 1

*யார் அந்த சாட்டர்டன்?*

14 வயது இளம் கவிஞராக இருந்து, பல புரட்சிகரமான தத்துவக் கவிதைகளை எழுதியவன்தான் சாட்டர்டன். அவன் அந்த இளம் வயதில் அநாதையாக வறுமையின் கொடுமையில் நின்று தவித்தவன்.

ரொட்டித் துண்டுக்காக சிறு சிறு கவிதைகளை எழுதி ஒரு ரொட்டிக் கடைக்காரனிடம் கொடுத்து, “”பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் அய்யா…” என்று கைநீட்டி நிற்பான். குழந்தைபோல் நிற்கும் அவனிடம் இரக்கம் கொண்டு ரொட்டிக் கடைக்காரன் துண்டு ரொட்டிகளைக் கொடுப்பான்.

பசிக்கும் வயிற்றிற்கும் அது போதுமா போதாது. என்ன செய்வான்?

பக்கத்திலிருந்த சாக்கடைக் கால்வாயின் பயங்கர நெடியை நுகர்ந்து, அதனால் ஏற்படும் மயக்கத்தில் அப்படியே தூங்கிவிடுவான்!

ஒருநாள் ஒரு கவிதையை எழுதி அதில் தன் பெயரை எழுதாமல் அப்போது புகழ்பெற்றிருந்த பெருங்கவிஞர் தாமஸ் கிரேயின் பெயரை எழுதி ஒரு பத்திரிகைக்காரரிடம் கொடுத்து,

“”ஐயா இதை தாமஸ் கிரே கொடுக்கச் சொன்னார். அவர் வரமுடியவில்லையாம். எனக்கு ஏதாவது காசு கொடுங்கள்” என்று வேண்டினான்.

சந்தா 2

அப்போதெல்லாம் கவிஞர் தாமஸ் கிரேயின் கவிதைகளை பத்திரிகைகளில் போடுவதே ஒரு பெருமை. ஏராளமானப் பத்திரிகைகள் விற்பனையாகும். பத்திரிகையாளர் அந்தப் பாடலைக் கண்டதும் மிக மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு, “”சிறுவனே இந்தா” என்று சில காசுகளைக் கொடுத்தார்.

சாட்டர்டன் மிகவும் ஆவலோடு காசுகளைப் பெற்றுக்கொண்டு வழக்கமான ரொட்டிக் கடைக்காரனிடம் சென்று ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சாக்கடைக் கால்வாயின் வெடிப்பில் முகம் வைத்து அந்த நெடியை நுகர்ந்தவனாய்த் தூங்கிவிட்டான்.

பத்திரிகையில் தன் பெயரில் ஒரு பாடலைக் கண்ட தாமஸ் கிரே வியப்படைந்தார். பத்திரிகையாளரிடம் அது பற்றிக் கேட்டார்.

“”ஒரு சிறுவன் தாங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லித்தான் இந்தக் கவிதையை என்னிடம் கொடுத்தான்” என்றார் பத்திரிகையாளர்.

கவிதையோ மிக அற்புதமாக இருந்தது. தன்னிலும் ஒரு சிறந்த கவிஞனே அதை எழுதி இருக்க முடியும் என்றெண்ணி-

“”இந்தக் கவிதைகளை எழுதிய அந்தப் பெரும் கவிஞனை நான் உடனே பார்க்க வேண்டும்” என்றார் தாமஸ் கிரே.

விசாரித்ததில் ரொட்டிக் கடைக்காரனுக்குத்தான் அந்தச் சிறுவனை தெரியும் என்றார்கள்.

ரொட்டிக் கடைக்காரரைக் கண்டு அவரிடம் கேட்டபோது, “”அதோ அந்த சாக்கடை வெடிப்புக்குப் பக்கம் தூங்கிக் கொண்டிருப்பான்” என்றார்.

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!

 

Leave A Reply

Your email address will not be published.