திருச்சியில் ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்யும் அறக்கட்டளை

0
உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்
சந்தா 2
திருச்சிராப்பள்ளியில் உரிமை கோரப்படாத உடல்களை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை இணைந்து ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் கூறுகையில்,
அனாதையாக இறந்து மருத்துவமனை பிணவறைகளில் உரிமை கோரப்படாத பெயர், விலாசம், அடையாளம் தெரியாத உடல்களை பெற்று அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினை செய் அறக்கட்டளை சார்பில் உரிமை கோராத பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் பணியினை செய்து வருகிறோம்.
பெயர் விலாசம் மதம் தெரியாத நபரின் உரிமை கோரப்படாத உடலினை காவல்துறை தரும் தகவலின் அடிப்படையில் மருத்துவமனை பிணவறையில் பெற்று முறைப்படி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் நல்லடக்கத்தில் பங்கேற்றவர்கள் நல்லடக்க நிகழ்வின் புகைப்படம் அல்லது ஒலி ஒளி பதிவினை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அறிவிக்கிறோம் என்றார்
நல்லடக்கம் செய்யும் பணியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா, வினைசெய் அறக்கட்டளை கார்த்திக், இப்ராஹிம், இஸ்லாம், முஹம்மது நவாப் உட்பட பல்வேறு தன்னார்வலர்கள் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்பர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.