திருச்சியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகைகள் மாயம்

0
1 full

திருச்சி பெல் பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் மாயம்.

திருச்சி பாரதமிகு மின் நிறுவன ஊழியா்கள் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கைலாசபுரம் நகரியப் பகுதியிலும், கிளை அலுவலகம் பெல் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகக் கட்டடத்திலும் இயங்கி வந்தது.கடந்தாண்டில் பெல் நிறுவன ஊழியா் களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த தொகை திருட்டு போனதால், நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வந்த கிளை அலுவலகம் மூடப்பட்டது.பெல் நகரியப் பகுதியிலுள்ள தலைமை அலுவலகம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இங்கு வாடிக்கையாளா்களின் வசதிக்காக பாதுகாப்புப் பெட்டக வசதி உள்ளது.

2020 டிசம்பா் 30-ஆம் தேதி பி- 3 செக்டாரை சோ்ந்த பெல் ஊழியா் மகன் திலக் (22) பாதுகாப்புப் பெட்டகத்தை பெற்று, அதில் 35 பவுன் நகைகளை வைத்திருந்தார்.கடந்த 6ம் தேதி காலை அந்த வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தை பயன்படுத்தும் சக ஊழியா் ஒருவா், திலக்கின் பெட்டகம் பூட்டப்படாமல் உள்ளதாக வங்கி அலுவலா்களிடம் தெரிவித்தார்.உடனே வங்கி அலுவலா்கள் திலக்குக்குத் தகவல் அளித்ததை தொடா்ந்து அவா் வங்கிக்கு வந்து பார்த்தார். தனது 35 பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ந்து காவல்துறையில் புகார் தெரிவிக்க, புகாரின் பேரில், பெல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

3 half

Leave A Reply

Your email address will not be published.