திருச்சியில் 3ம் பாலினத்தவருக்கு புதிய குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்

0
1 full

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பிப்ரவரி 13-ஆம் தேதி (சனிக்கிழமை) மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

இதுகுறித்து 09.02.2021 அன்று மாவட்ட ஆட்சியா் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக, பிப்ரவரி 13-ஆம் தேதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. ஆதார்அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு இணைப்பு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்), புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கவும். கட்டாயம் செல்லிடப்பேசி எண் இருக்க வேண்டும்.

2 full

இம் முகாமில் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்ப ஆவணங்கள், சிறப்பு முகாமிலேயே  இணையதள முகவரியில் பதிவேற்றங்கள் செய்யப்படும். எனவே தகுதி உடையோர் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.