திருச்சியில் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்ட வடமாநில முதியவர்

0
1 full

திருச்சியில்
சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்ட வடமாநில முதியவர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள்.

பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்துவிடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும்
சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

2 full

இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.

இந்நிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, வினைசெய் அறக்கட்டளை, தின சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி மாநகராட்சி புத்தூர் அரசு மருத்துவமனை முன் பகுதியில் உள்ள பிரதான சாலையில் அறியப்படாத வட மாநில முதியோர் கடுங்குளிரில் நிராதரவாய் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவரை அடையாளம் கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கும் வகையில் உறவினர்களிடம் இருந்து விலகி சாலையோரம் தனித்து வாழ்ந்து வந்த நபரின் விருப்பத்தின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வினைசெய் அறக்கட்டளை
கார்த்திக் ,தினசேவை அறக்கட்டளை சிவப்பிரகாசம், முகமது இப்ராஹிம் இஸ்மாயில் முகம்மது நவாப் உள்ளிட்டோரால் 9 பிப்ரவரி 2021 அன்று மீட்டெடுத்தனர்.

மீட்டெடுத்த நபர் ஹிந்தி மொழியை பேசுகிறார். மீட்டெடுக்கும் பொழுது அந்நபரிடம் எவ்வித தங்க , வெளளி ஆபரணங்களோ பொருளோ இல்லாமல் நிராதரவாய் இருந்தவரை மீட்டு திருச்சி புத்தூர் E3 அரசு மருத்துவமனை காவல் நிலையம் சட்டம் ஒழுங்குப் பிரிவில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் அந்நபருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் அந்நபர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்து பராமரிக்க திருச்சி புத்தூர் E3 அரசு மருத்துவமனை
காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையில் வட மாநில முதியவர் மக்கள் சிங்கை
திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்ல நிறுவனர் ராஜாவிடம் 9 பிப்ரவரி 2021 அன்று
ஒப்படைத்தனர்

3 half

Leave A Reply

Your email address will not be published.