திருச்சியில் நன்கொடை கேட்டு கார் கண்ணாடியை உடைத்த  இருவர் கைது:

0
1 full

திருச்சியில் நன்கொடை கேட்டு கார் கண்ணாடியை உடைத்த  இருவர் கைது:

திருச்சி, பிராட்டியூர்,  கௌரி நகரைச் சேர்ந்தவர் வாகித் அகமது. இவர் அதே பகுதியில் உள்ள கார்  ஷோரூமில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  நேற்று முன்தினம் (7.02.2021) ஷோரூமிக்கு வந்த  4 நபர்கள் மதுரையில் மாநாடு நடத்த போவதாக கூறி ஒரு லட்சம் நன்கொடை கேட்டுள்ளனர். மேலாளர்  வாகித் நன்கொடை தர மறுத்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சோரூம் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்த மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து  பாலக்கரையை சேர்ந்த அமிருதீன், மற்றும் லால்குடியை சேர்ந்த செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அல்லித்துறையை சேர்ந்த வக்கீல் சந்தர் மற்றும் கோல்டு குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.