திருச்சியில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் கைது:

திருச்சியில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் கைது:
திருச்சி அருகே கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்கு இரவு நேர காவலாளி இல்லாத நிலையில் நேற்று முன்தினம் (7.02.2021) அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத ஆத்திரத்தில், ஏடிஎம் இயந்திரத்தின் தொடி திரையை உடைத்து சேதபடுத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வங்கியின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.
