கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

0
full

கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ukr

கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மனுவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பிரதான போக்குவரத்து சாலைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் நடமாடுகின்றன.

கால்நடைகள் நடமாட்டத்தால் சாலையில் பயணிக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயங்கள், கொடும் காயங்கள், மரணங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
மேற்படி காரணங்களால் விலை மதிப்பற்ற மனித உயிர்களுக்கு ஏற்படும் காயங்கள், கொடும் காயங்கள், மரணங்களை தவிர்க்கும் வகையில் சாலை பயனீட்டாளர்கள் பாதுகாப்பையும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என சாலை பயனீட்டாளர் நல அமைப்பு நிறுவனத்தலைவர் அய்யாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வினைசெய் அறக்கட்டளை கார்த்திக், நாட்டுக்கு நல்லது செய்வோம் அறக்கட்டளை கணேஷ் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.