பாரதிதாசன் பல்கலைக்கழக புதிய துணை வேந்தருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வாழ்த்து !

0
1

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் மேனாள் பேராசிரியர் எம்.செல்வம் கடந்த 05.02.2021ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் புதிய துணைவேந்தருக்கு (AUT) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மற்றும் தஞ்சை மண்டலத்தின் சார்பில் வாழ்த்து இன்று (08.02.2021) தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் சுகுணலெட்சுமி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

2
4

மேலும் புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவிக்கும் இந்நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்புக்குக் குழுவின் மேனாள் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேராசிரியர் சேவியர் செல்வக்குமார், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவரும், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் லீமாரோஸ், மண்டலச் செயலர், திருச்சி, தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் சார்லஸ், தஞ்சை மண்டலத் தலைவர் பூண்டி புட்பம் கல்லூரி பேராசிரியர் சந்திரன், செயலர், பூம்புகார் பேரவைக் கல்லூரி பேராசிரியர் கோகுலகிருஷ்ணன், முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.