11 மாதங்களுக்கு பின் திருச்சியில் நீதிமன்றங்கள் இயங்க தொடங்கியது:

11 மாதங்களுக்கு பின் திருச்சியில் நீதிமன்றங்கள் இயங்க தொடங்கியது:
கொரோன பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. ஊரடங்கில் கடந்த 10 மாதங்களாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை, முக்கியமான வழக்குகளில் ஜாமீன் தொடர்பான மனுக்கள் மட்டுமே நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். புதிதாக மனுத் தாக்கல் செய்பவர்கள் அதற்காக வைத்திருந்த பெட்டிகளில் போடப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பிப்ரவரி 8 முதல் திறக்கப்படும் என சென்னை ஐகோர்ட் அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்ந்து நேற்று (8.02.2021) முதல் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முழுவதுவமாக செயல்படத் துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு, நீதிமன்றத்தின் பிரதான கதவு திறக்கப்பட்டதை வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
