திருச்சியில் ஏமாற்றி திருமணம் செய்த வங்கி ஊழியர் கைது:

0
full

திருச்சியில் ஏமாற்றி திருமணம் செய்த வங்கி ஊழியர் கைது:

ukr

திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றதை மறைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் அஞ்சல்காரன் தோப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்பவரை மூன்றாவதாக ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இது தற்போது சித்ராவுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது திருமணத்தை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி சித்ரா திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்

half 1

Leave A Reply

Your email address will not be published.