திருச்சி: தோண்டத் தோண்ட புதையல், சிவ லிங்கங்கள், தங்கம்…

0
1

 

திருச்சி: தோண்டத் தோண்ட புதையல், சிவ லிங்கங்கள், தங்கம்…

மிகவும் பழமையான சிவலிங்கம் திருச்சியில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கங்களை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

2

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம் வளாகத்தில் உள்ள குபேர லிங்கம் சன்னதியின் அருகே உள்ள மதில் சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து குறிப்பிட்ட சுவரை புனரமைக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை நடந்த பணியின் போது மண்ணில் புதையுண்டிருந்த 3 அடி உயரத்தில் ஒன்றும் 2 அடி உயரத்திலும் என 2 சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மண்ணுக்கு அடியிலிருந்தது கண்டெடுக்கப்பட்டது. சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதே கோயிலில் தங்க காசு புதையல் கண்டெடுக்கப்பட்டது.

இத்திருக்கோயில் கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்டது. அவர் கட்டிய முதல் மாடக்கோயில் இதுவாகும். சோழமன்னர்கள் வழிபட்ட சிவலிங்கம் எனக் கூறப்படுவதால் இதனை ஏராளமான பக்தர்கள் தற்போது தரிசித்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.