திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை சரவணன் சாலை விபத்தில் மரணம்

0

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை OFTEU தலைவர் M. சரவணன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரழந்தார்.

கடந்த 29.1.2021 மாலை சுமார் 5 மணி அளவில் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறைச்சாலை எதிரில் நண்பருடன் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்லும் போது சாலையின் குறுக்கே மாடுகள் வந்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்த சரவணனின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

‌சந்தா 1
சந்தா 2

சுயநிலைவு இல்லாமல் தனியார் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.

திருச்சி மாநகரில் தொடர்ச்சியாக பிரதான  சாலைகளில் மாடுகள்  கூட்டம் கூட்டமாக மறித்து நிற்பதும், இதனால் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுவதும் மரணிப்பதும் திருச்சி மக்களிடையே சாலை பயணம் பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் நிற்கும் மாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.