சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்சியில் இலவச மருத்துவ பரிசோதனை

0
full

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்சியில் இலவச மருத்துவ பரிசோதனை 

half 2

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகரில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று (5.02.2021) நடைபெற்றது.

இம்முகாமை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை கமிஷனர் வேதரத்தினம் பிரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவர் மதன் ராஜ் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.