திருச்சியில் (8.02.2021) முதல் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்:

0
1 full

திருச்சியில் (8.02.2021) முதல் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள TNPSC GR-II தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 08.02.2021 (திங்கள் கிழமை) முதல் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி வகுப்பாக துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுநர்களால் நடத்தப்படுவதுடன் அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் துணை இயக்குநர், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முகவரியில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்  எஸ்.சிவராசு, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

2 full
3 half

Leave A Reply

Your email address will not be published.