திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை:

0
1 full

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆகஸ்டு 2020 சேர்க்கைக்கான இடங்கள் ஆன்லைன் மூலம் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வில் நிரப்பப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள காலி சேர்க்கை இடங்களுக்கான நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது மீண்டும் நேரடி சேர்க்கைக்கான தேதி 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள
விண்ணப்பதாரார்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து மீதம் காலியாக உள்ள சேர்க்கை இடங்களில் சேர்ந்து கொள்ள திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.