திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரித்த 3 பேர் கைது

0
1 full

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரித்த 3 பேர் கைது

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் சுந்தரம் 65. திருவாரூரை அடுத்த பூலாங்குடி கிராமத்தில் இவருக்கு சொந்தமாக 4,800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை திருச்சி வேங்கூர் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த பத்திர எழுத்தாளர் ராதா மற்றும் அவரது உதவியாளர் காட்டூரை சேர்ந்த அசோக் ஆகியோர் அபகரிக்கும் நோக்கில் போலியான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து கீழ்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவருக்கு விற்றுள்ளனர்.

இவர் அந்த நிலத்தை வேறு இருவருக்கு விற்றுள்ளார் இது குறித்து தகவலறிந்து, சுந்தரம் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார் போலீசாரின் விசாரணையில் போலியான ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்திர எழுத்தர் ராதா, உதவியாளர் அசோக், குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

3 half

Leave A Reply

Your email address will not be published.