திருப்பாவை பரிசளிப்பு விழா

திருப்பாவை பரிசளிப்பு விழா
இடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் ஊரடங்கு காலத்தில் முகநூல் வழியாக திருப்பாவை 30 பாசுரங்களை ஐந்தாம் வகுப்பு பயிலும் 30 மாணவிகளைக் கொண்டு பாசுரங்களை பாடவைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
30 பாடல்களை 30 நாள்கள்


30 மாணவியர்கள் பாடினர்.
பாசுரங்களை பாடிய 30 சிறுமிகளுக்கும் பாராட்டு சான்றிதழ், நூல், நோட்டு, பேனா, துணிப்பை, மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பூ. ஜெயந்தி வரவேற்றார்.மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக அயோத்தி, கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
கி.சதீஷ்குமார், மற்றும் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி சீதாலட்சுமி, ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன், உ.வே.சா தமிழ்மன்றம் சார்பில் தமிழ்க்குரிசில் விருதுகளை சிறுமிகளுக்கு வழங்கினார். நிறைவாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஹ.புஷ்பலதா நன்றி கூறினார்.
