மஸ்கெட்டில் உயிரிழந்தவர் உடல் 20 நாட்களுக்கு பின் திருச்சிக்கு வந்தது:

0
full

 மஸ்கெட்டில் உயிரிழந்தவர் உடல் 20 நாட்களுக்கு பின் திருச்சிக்கு வந்தது:

ukr

திருச்சி, லால்குடியை சேர்ந்த ராஜாமோகன் என்பவர் மஸ்கட்டில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13.01.2021 அன்று மஸ்கட்டில் நடைபெற்ற சாலைவிபத்தில் உயிரிழந்தார். ராஜாமோகன் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும், உடலை பெற முடியாமல், குடும்பத்தினர் தவித்தனர். இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியினரை அணுகினர்.

இதனையடுத்து, மஸ்கட்டில் உள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் மூலம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ராஜாமோகனின் உடலை திருச்சிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர்.  இதனையடுத்து, நேற்று 4.2.2021 அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது.  உடலைப் பெற்ற எஸ்டிபிஐ கட்சியினர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாமோகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவினர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.