நலவாழ்வு முகாமிற்கு திருச்சியிலிருந்து செல்லும் 4 யானைகள்:

நலவாழ்வு முகாமிற்கு திருச்சியிலிருந்து செல்லும் 4 யானைகள்:
மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களது ஆணைப்படி திருக்கோயில் மற்றும்
திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க 2020-2021-ஆம் ஆண்டு
சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி,
அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில்
08.02.2021 முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாமிற்கு திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர்
மண்டத்திலிருந்து ஸ்ரீரங்கம்,அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமனசுவாமி திருக்கோயில், (லெட்சுமி), திருவானைக்காவல், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், (அகிலா)ஆகிய மூன்று திருக்கோயில்களிலில் உள்ள யானைகள் 07.02.2021 காலை 6.00 மணியளவில் திருப்பராய்த்துறை, அருள்மிகுதாருகாவனேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து புத்துணர்விற்காக முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

முகாமிற்கு செல்லும் யானைகளுடன் கால்நடை மருத்துவக் குழுவும் செல்கிறது.
முகாமில் தினசரி காலை மாலை நடைப்பயிற்சி,பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் யானைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் திருக்கோயில்களில் நடைபெறும் தினசரி பூஜைகள் மற்றும்
திருவிழாக்களில் தொடர்ந்து கலந்து கொள்வதால் இந்த யானைகளுக்கு 48 நாட்கள் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாம் புத்துணர்ச்சி பெற வாய்ப்பாக அமையப் பெறுகிறது. இயற்கையான எழில் சூழ்ந்த வனப்பகுதியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாம் யானைகளின் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
