திருச்சி அருகே கோவில் கூட்டநெரிசலில் 14 பவுன் நகை பறிப்பு :

திருச்சி அருகே கோவில் கூட்டநெரிசலில் 14 பவுன் நகை பறிப்பு :
மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ள அத்திவிநாயகர் கோயிலில் நேற்று (4.02.2021) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்த விமலா என்பவரிடம் 4 பவுன், ஆரியமாலா என்பவரிடம் 3 பவுன், ராணி என்பவரிடம் 7 பவுன் தங்க நகைகள் என மொத்தம் 14 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
