Covid -19 தடுப்பூசி போட்டுக் கொண்டார் திருச்சி மாவட்ட ஆட்சியர்:

Covid -19 தடுப்பூசி போட்டுக் கொண்டார் திருச்சி மாவட்ட ஆட்சியர்:
திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று (4.02.2021) மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, இ.ஆ.ப., – Covid -19 தடுப்பூசி போட்டுக்கொண்டார்..
தடுப்பூசி போட்டுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாது:

Covid -19 தடுப்பூசி முதல் கட்டமாக மருத்துவர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள்,
வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகளில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு
தடுப்பூசி போடப்படுகிறது. நமது மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் 1,362 நபர்கள்
பதிவுசெய்துள்ளனர். இதில் முதலாவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற முறையில் Covid-19 தடுப்பூசி இன்று நான் போட்டுக்கொண்டேன். இன்று என்னுடன் வட்டாட்சியர்களும் போட்டுக்கொண்டுள்ளனர். மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் தடுப்பூசி இன்று போட்டுக்கொள்கின்றனர். இதுவரை மாவட்டத்தில் 4,342 நபர்களுக்கு Covid -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 25,000 தடுப்பூசி போட வேண்டியுள்ளது. ஒருவார காலத்திற்குள் 50 சதவீதம் தடுப்பூசி போடும் பணி நிறைவடையும். மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசி இருப்பில் உள்ளது. Covid -19 தடுப்பூசி தொடர்பாக தவறான வதந்திகளை வாட்ச்ஆப்பில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர் லெட்சுமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ராம்கணேஷ், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் சதீஸ்குமார், மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன், மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் யாழினி, மருத்துவர் அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
