திருச்சி பால்பண்ணை-துவாக்குடி சர்வீஸ் ரோடுக்கு பதிலாக பறக்கும் சாலை திட்டம் கேட்டு,வணிகர்கள் திடீர் போர்க்கொடி !

0
1

திருவெறும்பூர் பிப் 5. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ்சாலை அமைப்பதற்கு பதிலாக யாரையும் பாதிக்காவண்ணம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி திருச்சி கலெக்டர் நேரில் சந்தித்து வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்களோடு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தெரிவித்தார்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோர் அவசர ஆலோசனை காட்டூரில் நடந்தது.

2

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.

 

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கியது என்றும் அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததாகவும் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவிடம் சர்வீஸ் சாலை அமைத்தாள்பல வணிக நிறுவனங்களும் கட்டிடங்களும் பாதிக்கப்படும் என்று எடுத்துக் கூறியதாகவும் அதன் அடிப்படையில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் டி ஆர் பாலு முடிவு எடுத்ததாகவும் தற்போது உள்ள சிறிய சர்வீஸ் சாலைகளில் கம்பங்கூல், பஞ்சர் கடை லாரி நிறுத்தும் இடமாக தான் உள்ளது என்றும் நாங்கள் சர்வீஸ் சாலைக்கு எதிரானவர்கள் என்றும் விபத்துகள் சாலை விரிவாக்கம் செய்யும்போது தான் ஏற்பட்டது என்றும் தற்போது அது இல்லை என்றும்.

மேலும் அரை வட்ட சாலை துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 70% பணி முடிந்து விட்டதாகவும் வீதம் இந்த பணியை விரைந்து முடித்து செயல்படுத்தினால் சாலை விபத்துக்கள் தவிர்க்கப்படும் கூறியதோடு இதற்கு மாற்று வழி என்ன என்பதை யோசிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு சர்வீஸ் ரோடு தான் வேண்டும் என்று சிலர் தேர்தல் புறக்கணிப்பு என மிரட்டி வருவதாகவும் வியாபாரிகள் வயிற்றில் நடித்தவர்கள் யாரும் வாழ்ந்தது கிடையாது என்றும் வியாபாரிகள் சங்கம் சாதி மதம் அரசியல் சார்ந்தது அல்ல என்றும் இந்த சர்வீஸ் சாலையில் இடிக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து கருத்து அரசு கூட கேட்கவில்லை என்றும் இது ஒரு முட்டாள்தனமான செயல் என்றும் ரோடு போடுவதால் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கமிஷன் கிடைக்கும் என்றும் ஆனால் எனது உயிரே போனாலும் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5கிலோ மீட்டர் தூரத்துக்கு இடிக்க விடமாட்டேன் என்றும் கூறியதோடு பறக்கும் சாலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

இந்த பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக இழப்பீடு ரூபாய் 800 கோடி வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சேலத்தில் மக்கள் கேட்காமலே பறக்கும் சாலைத் திட்டத்தை போட்டது போல் இங்கேயும் போட வேண்டுமென்றும் நாங்களும் உங்களுக்கு ஓட்டு போட்டுள்ள வேண்டும் கூறினார். மேலும் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் போது ஆகும் இழப்பீடு செலவைவிட பறக்கும் சாலை திட்டம் அமைப்பதற்கு செலவுகுறை என்றும் இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதனால் அமைதி பேச்சுவார்த்தையை கலெக்டர் உடனடியாக நடத்த வேண்டுமென்றும் அவர்களிடம் கூப்பிட்டு கேளுங்கள் என்றும் வணிகர்களிடம் ஒரு லட்சம் ஓட்டுகள் இருப்பதாகவும் அதனால் திருவெறும்பூர் தொகுதிகள் யார் போட்டியிட்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் வணிகர்களின் ஆதரவு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்றும் கூறினார்.

இதுகுறித்து திமுக நிர்வாகி உதயநிதி ஸ்டாலினையும், தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வோம் என்றும் அதற்காக வரும் 9-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுவதாகவும் அதன்பிறகு முதல்வர் துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் அகில இந்திய வணிகர் சங்க தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

4

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 14.5 கிலோமீட்டருக்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்காக கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள், மருத்துவ மனைகள், வழிபாட்டுத்தலங்கள், கட்டிடங்களை இடிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு கட்டிடங்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சேலம், பெங்களூரு நகரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பறக்கும் பாலம் திட்டத்தை போன்று பழைய பால்பண்ணை முதல் தூத்துக்குடி வரை அமைக்க வேண்டும்

மாநகர பகுதி வழியாக வெளியூர் செல்லும் வாகனங்கள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அரைவட்ட சாலையான அசூர் துவங்கி ஜீயபுரம் வரை திட்டம் தொடங்கி பல ஆண்டுகளாக கடந்து விட்ட நிலையில் இன்னும் முற்றுப் பெறாமல் உள்ளது என்றும் இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பழைய பால்பண்ணை துவாக்குடி வரையிலான சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது அதனால் அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதனால் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்றும் இது சம்பந்தமாக திருச்சி கலெக்டரிடம் 9-ஆம் தேதி சந்தித்து மனு கொடுப்பதோடு தமிழக முதல்வர் துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை மாநில தலைவர் விக்கிரமராஜாமற்றும் கோவிந்தராஜன் தலைமையில் மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிக்க ஈடுபடுவது

அதன் பிறகும் தீர்வு எடுப்பதற்கு படாவிட்டால் ஆதார் கார்டு ரேஷன் கார்டு வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

பின்னர் செய்தியாளர்களிடம்கோவிந்தராஜுலு கூறியதாவது

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பானை முதல் முடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கும் முயற்சியை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேலும் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் புறக்கணிப்பு ஈடுபடுவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரும் கட்சிக்கு மட்டுமே நாங்கள் ஓட்டு அளித்து வெற்றி பெறச் செய்வோம் என்றும்எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்குவோம் என்றோம் மாநகராட்சிகளில் எப்படி சர்வீஸ் சாலை அமைக்க முடியும் என்றும் கூறினார்.

குறிப்பாக நமது நிருபர் நீதிமன்றம் போகிறீர்களா என்று கேட்டதற்கு

நீதிமன்றம் போக மாட்டோம் என்றும் அரசு சொல்வதை தான் நீதி மன்றம் சார்பாக சொல்லும் என்றும் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன்,காட்டூர் செந்தில் பாலு, நிஜாம் புட்வேர் ரபீக், அப்துல் சலாம் உள்ளிட்ட வணிகர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.