பராமரிப்பு இல்லாத திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

0
1 full

பராமரிப்பு இல்லாத திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

திருச்சி, திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் பெரும் பள்ளத்துடன் சாலை பராமரிப்பு இன்றி இருப்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.

 

2 full

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை ஆகும். இது ஒரு கட்டண சாலையும் கூட மதுக்கான் எனும் தனியார் நிறுவனம் சாலை அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் புதுப்பிக்க படாமல் உள்ளது.சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. பராமரிப்பு பணி கூட செய்யப்படுவது இல்லை. சாலையின் இருபுறத்திலும் சுமார் ஐந்து அடி அகலத்திற்கு மணல் திட்டு சேர்ந்து உள்ளது அது அகற்றப்படுவது இல்லை. இதனால் சாலையில் பெரிய வாகனங்கள் புழுதிய பரப்பிக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

அதன் பின்னால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்களில் மண் பறந்து வந்து விழும் பொழுது அதனை துடைத்து கொள்ள வாகன ஓட்டிகள் முயற்சிக்கும் பொழுது ஏற்படும் தடுமாற்றத்தால் விபத்து நடக்க அதிகம் வாய்ப்புள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியே சென்று வருகின்றது. மாதத்திற்கு பல கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிப்பதில்லை.

இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே, பெரும் விபத்து இந்த சாலையில் நடக்கும் முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.