திருச்சி அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம், நகை கொள்ளை:

0
full

திருச்சி அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம், நகை கொள்ளை:

ukr

திருச்சி, ஏர்போர்ட் அருகே பச்சை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில், ரத்தினவேல் என்பவர் 5 வருடமாக காவலாளியாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் காவலாளி ரத்தினவேலை அரிவாளால் தாக்கிவிட்டு,  அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த 4500 பணம், மற்றும் கோவில் உண்டியலை உடைத்து, 2 ஆயிரம் ரொக்கம், அம்மன் கழுத்திலிருந்த தாலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து,தகவலறிந்து வந்த போலீசார், வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த ரத்தினவேலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.