திருச்சியில் ஐஐஎம் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு:

0
1 full

திருச்சியில் ஐஐஎம் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு:

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன புதிய இயக்குனராக பவன்குமார் சிங் நேற்று (3.02.2021) பொறுப்பேற்றார். இவர், குர்கான் எம்.டி.ஐ. இந்தூர் ஐ.ஐ.எம் இயக்குநராகவும், சம்பல்பூர் குழுத் தலைவராகவும் இருந்தவர். புதிய இயக்குனராக பொறுப்பேற்ற இவர், ஐஐஎம் வளாகத்தில் ரூ.43 லட்சத்தில் மாணவர்களுக்காக நவீன உடற்பயிற்சி கூடத்ததை திறந்து வைத்து கூறியதாவது:

10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வரும் திருச்சி ஐஐஎம்மில் கல்வி பயின்றவர்கள் பலர் சர்வதேச  அளவில் உயர் பதவியில் உள்ளனர். மேலும், கற்பிக்கும் தரத்தை அதிகரிப்பது, தொழில்நுட்ப வசதிகள், புதிய திட்டங்களை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செயல்படுத்த திட்டமிட்ப்பட்டுள்ளது, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.