திருச்சி அருகே கடமை தவறிய டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு:

0
1 full

 திருச்சி அருகே கடமை தவறிய டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு:

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் டோல்கேட், உத்தமர்சீலி மாதா சர்ச் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்.  கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு பள்ளம் தோண்டியதற்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஊராட்சி மன்றம் சார்பில் பாலச்சந்திரனுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பாலச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட, லால்குடி டிஎஸ்பி ராஜசேகர், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாவும், கடமையை செய்ய தவறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாலச்சந்திரன் கோர்டில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜசேகர் மீது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.