திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு !

0
1 full

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு !

திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் வேதியல் துறையின் சார்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கி 3/2/2021 மற்றும் 4 /2/ 2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மேலும் ஜூம் செயலி வழியாக மெய்நிகர் கருத்தரங்காக நடைபெறுகிறது.

2 full

கருத்தரங்கை கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன் தொடங்கி வைத்தார். மேலும் வேதியல் துறை தலைவர் பிரின்ஸ் மெர்லின், சர்மிளா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி எழிலரசி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் பேராசிரியர் பியூலா கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, தைவான், சீனா போன்ற பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், வேதியல் துறை நிபுணர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள், தயார் செய்த அறிக்கையை கருத்தரங்கில் சமர்ப்பித்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.