திருச்சி திருவெறும்பூரில் சாலைப்பாதுகாப்பு மாத விழா:

0
full

திருச்சி திருவெறும்பூரில் சாலைப் பாதுகாப்பு மாத விழா:

திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று திருவெறும்பூரில் நடந்தது. கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது.

ukr

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் திருவெறும்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு மாத விழாவிற்கு திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் சம்பத், காவலர்கள் மகேஷ், சந்தர் பான்சிங், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கும் நகாய் பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

poster

திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த சாலை பாதுகாப்பு மாத விழாவில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கவரும் வகையில் நாட்டிய குதிரையின் நடனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக் கொண்டும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டக் கூடாது என்பதை பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் பல்வேறு ஊர்களுக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.