திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 10 மாதங்களுக்கு பின் மக்கள் நேரடியாக மனு: 

0

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 10 மாதங்களுக்கு பின் மக்கள் நேரடியாக மனு: 

கொரோனா  பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதமாக  ஊரடங்கு அமலில் இருந்தது.  இதன், காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் அரசு படிப்படியாக தளர்வுகளை செய்துள்ளது. இதனால், 10 மாதங்களுக்கு பின் நேற்று (1.02.2021) திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனு பெறப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது,
பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள்,இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 138 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 21 மனுவும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 79 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 27 மனுக்களும், புகார் தொடர்பான 21 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்,சலவைப்பெட்டி, தொடர்பாக 15 மனுக்களும், பென்சன்,நிலுவை தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம்
தொடர்பான மனுக்கள் தொடர்பாக 05 மனுவும், என மொத்தம் 306 மனுக்களும், இதர மனுக்கள் 75 என மொத்தம் 381 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

‌சந்தா 1
சந்தா 2

மேலும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள்
நல அலுவலகம் மூலம், மாற்றுத்திறனாளிகள் சட்டப் படிப்பு முடித்த நபர்களுக்கு சட்டப்புத்தகங்கள் வாங்கவும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்ய வழங்கும் நிதி உதவி திட்டத்தின் கீழ் 04 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் தலா ரூ.40,000 உதவித்தொகைக்கான காசோலையும், மூன்றாம் பாலின நல வாரியத்தின் மூலம் 09 திருநங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டையும் மாவட்ட
ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  த.பழனிகுமார், மாவட்ட சமூக நல அலுவலர்
தமீம்முனிசா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.இரவிச்சந்திரன்ரூபவ் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்ரூபவ் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.