பத்மஸ்ரீ விருது பெறும் சுப்புராமனுக்கு ரோட்டரி டிஸ்ட்ரிக் 3000 சார்பில் பாராட்டு விழா !

பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்கோப் நிறுவனத்தின் நிறுவனர் சுப்புராமன் சுப்பு ராமனுக்கு திருச்சி ரோட்டரி டிஸ்ட்ரிக் 3000 சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது.
பத்மஸ்ரீ விருது பெறும் சுப்புராமன் பேசுகையில் ; தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மலத்தையும், சிறுநீரையும் உரமாக பயன்படுத்தி இயற்கையை பாதுகாக்க தொடர் பயணத்தை முன்னெடுப்போம். இரசாயன உரத்தை புறக்கணித்து இயற்கை சூழலை உருவாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி டிஸ்ட்ரிக் 3000 சங்கத்தைச் சேர்ந்த தலைவர் அறிவரசன், செயலாளர் கிருபாகரன், டேரேக்டர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
