கரோனா வைரஸ் தடுப்பு ஊசி போடலாமா இல்லை பக்கவிளைவுகள் வருமா ?

0
1 full

கரோனா வைரஸ் தடுப்பு ஊசி போடலாமா இல்லை பக்கவிளைவுகள் வருமா ?

உலக நாடுகள் அனைத்திலும் கரோனா இரண்டாவது அலை வந்து முதல் அலைய விட மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவுக்கு இரண்டாவது அலை வராது என உறுதியாக யாராலும் சொல்லமுடியாது. இந்த முறை கரோனா வைரஸை எதிர்கொள்ள தடுப்புஊசி வந்தாலும் மக்களிடம் மத்திய மாநில அரசுகள் மீது இருக்கும் அவநம்பிக்கை கரோனா தடுப்பு ஊசி மீது பயத்தை ஏற்படுத்தி உள்ளது

வியாதிகளுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்து அதை நடைமுறைப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல விஞ்ஞானிகள் மருத்துவர்களின் கடும் உழைப்பு & அறிவு தியாகம் அதில் இருக்கிறது. அரசியல் மீது இருக்கும் கோபத்தை தடுப்பு ஊசி மீது காட்டுவது சரியல்ல உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. சாதாரண காய்ச்சலுக்கு போடும் மாத்திரை கூட ஒரு சிலருக்கு அலர்ஜி வரத்தான் செய்யும். கரோனா வைரஸ் தடுப்பூசி அதற்கு விதிவிலக்கல்ல

2 full

ஆனால் 70 சதவீதம் பாதுகாப்பு கொடுக்கும் என உறுதியான தகவல் வருகிறது. ஒரு தடுப்பூசி 50 சதவீதம் பாதுகாப்பு கொடுத்தாலே மிகப் பெரிய வெற்றி தான் கோவேக்சின் தடுப்பூசி இன்று போட்டு கொண்டேன். பாரத் பயோடெக்யின் தயாரிப்பு முற்றிலும் நம் விஞ்ஞானிகள் மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது மூன்றாவது கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பூசி உள்ளது அதை நன்கு புரிந்து பரிசோதனை யில் என்னையும் உட்படுத்தி கொள்கிறேன் என கையெழுத்து போட்டு தான் கோவேக்சின் தடுப்பூசி எடுத்து இருக்கிறேன்.

இரண்டாவது டோஸ் பிப்ரவரி 27 ஆம் தேதி, அதற்கு பிறகு 15 நாட்கள் ஆகும் நோய் எதிர்ப்பு தன்மை வருவதற்கு இணையதளத்தில் இருக்கும் நண்பர்கள் தொடர்ந்து என்னை கவனியுங்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு கூட நீங்கள் முடிவு செய்யலாம் நோயாளிகளை நேரடியாக பார்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது என்று நினைக்கிறேன் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை விட குறைந்த பட்ச பாதுகாப்பு சரி என்று கருதுகிறேன்.

மருத்துவர் ரொஹாயா

3 half

Leave A Reply

Your email address will not be published.