குழந்தைகளை மீட்க ‘ஆப்ரேசன் ஸ்மைல்’ !

0
1 full

திருச்சி ரயில்வே ஜங்சனில் பெற்றோரை பிரிந்த குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் அதிரடி திட்டமாக ‘ஆப்ரேசன் ஸ்மைல்’ என்ற புதிய திட்டத்தினை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்துள்ள குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பிப்ரவரி 1. 2021 முதல் பிப்ரவரி 15.2021 வரை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பெற்றோரோடு சண்டையிட்டு வெளியே வரும் குழந்தைகளை மீட்டு மற்றும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து. அவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் கொடுக்கவும். மேலும் ரயில் வழியாக வேலைகளுக்கு அழைத்து வரப்படும் சிறுவர்களை மீட்டு பாதுகாப்போடு, கல்வி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தவே ‘ஆபரேசன் ஸ்மைல்’ என்ற அதிரடி திட்டம் தொடங்கப்படுவதாக ரயில்வே எஸ்.பி செந்தில்குமார் கூறினார்.

2 full

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக் குழு தலைவர் கமலா, ரயில்வே சைல்டு லைன் ( 1098 ) திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தைகளை மீட்பதற்காக திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட 24 காவல் நிலையங்கள், 6 புறக்காவல் நிலையங்களில் 30 இடங்களில் குழந்தைகள் மீட்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.