திருச்சியில் ஜாக்டோ ஜியோ கருத்துப் பகிர்வு கூட்டம்

0

திருச்சியில் ஜாக்டோ ஜியோ கருத்துப் பகிர்வு கூட்டம்

 திருச்சியில் இன்று (31/01/2021) மாலை ஜாக்டோ ஜியோ கருத்துப் பகிர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் கனகராஜ், திருச்சி மாவட்டம் சார்பாக தலைவர் யோகராஜ் மற்றும் செயலாளர் லியோ லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்தா 2

கூட்டத்தில்  மாநில பொதுச் செயலாளர் கூறியதாவது:

‌சந்தா 1

கடுமையான பாதிப்புக்கு உட்பட்டு இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 17b உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்வது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவது, ஊதிய முரண்பாடு களைவது, ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒன்று பட்டு நமது கோரிக்கைகளை வென்றெடுப்பது, ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி எடுத்துரைத்தார்.

மேலும், பிப்ரவரி மாதம் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் (8-02-2021, 9-02-2021, 10-02-2021) ஆகிய மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ( 72 மணி நேரம்) நடத்துவதாகவும்,  (8-02-2021, 09-02-2021, 10-02-2021) ஆகிய மூன்று நாட்களும் அந்தந்த மாவட்டங்களில் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.