திருச்சியில் ஆதரவற்ற பிரேதத்தை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்

0
1 full

திருச்சியில் ஆதரவற்ற பிரேதத்தை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வினை செய் அறக்கட்டளை கார்த்திக் உள்ளிட்டோர் ஆதரவற்ற அனாதை பிரேதத்தை நல்லடக்கம் செய்தனர்.


நல்லடக்கம் செய்தது குறித்து யோகா விஜயகுமார் கார்த்திக் உள்ளிட்டோர் கூறுகையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை இணைந்து
வயதானவர்கள் மட்டுமின்றி தங்களை கவனிக்க யாரும் இல்லை என்ற நிலையில் உள்ள வறியவர்கள் தெருவில் நடமாடுபவர்களுக்கும், உணவகங்கள், திருமண மண்டபங்களில் வீசி எறியப்படும் எச்சில் இலைகளில் கிடக்கும் உணவுகளை உண்டு ஜீவனம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு திருச்சி மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட இடங்களில் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றோம்.

2 full

தங்க இடமின்றி சாலையோரம் கடும் குளிரிலும், மழையிலும், வெயிலிலும் வாழ்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க பாதுகாப்பான இடம் வழங்கும் நோக்கில் ஆதரவற்றவர்களை மீட்டு சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து பாதுகாக்கும் வகையில் சமூக நலத்துறையில் பதிவு செய்துள்ள பராமரிப்பு இல்லங்களில் சேர்த்து வருகிறோம். மீட்கப்பட்ட நபர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் உற்றார் உறவினர்களிடம் பேசி தகுந்த குடும்ப நல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கி குடும்பத்துடன் சேர்த்து வருகிறோம். சிலர் குடும்பத்துடன் தொடர்ந்து செல்வதும் உண்டு. பிறகு வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொழில் முறையாக பிச்சை எடுப்பவர்களும் உண்டு. ஆனால் தொடர்ந்து களப்பணி செய்து வரும் சூழலிலே இறந்த உடலை யாரும் வாங்க முன் வராத நிலையில் ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்ய முடிவு செய்தோம்.

அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையம் மூலம் தகவல் பெற்று இறந்த நபரின் பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிரதேதத்தினை அரசு மருத்துவமனை மருத்துவர் பிரேத பரிசோதனை முடித்து கொடுக்கப்பட்டதை திருச்சிராப்பள்ளி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மயானத்துக்கு கொண்டு வந்து மரித்த உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதிச் சடங்குகள் செய்து உடலை புதைத்தோம். அத்தகவலை காவல் நிலையத்திற்கு புகைப்பட ஆவணங்களுடன் தெரியப்படுத்தினோம் என்றார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.