வாழ்வின் இறுதி வரை தமிழுக்காக உழைத்த நயினார் முகம்மது

0
full

தமிழ்த் துறைத் தலைவராக திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் பணியாற்றியவர். 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.  பணி ஓய்வுக்குப்பின் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்துடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவைத் தோற்று வித்து, 28 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்து சேவையாற்றினார்.

அத்துடன், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்ததுடன், ஐந்து பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடுகளை நடத்தியவர். இதனால் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தவர்.

திருச்சிராப்பள்ள்ளி தமிழ்ச் சங்கத்தில் பெரும் புள்ளியாக இருந்த இவர் இறக்கும் வரை அதன் துணை அமைச்சராக இருந்தவர். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்றார்.

poster
ukr

1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று சனவரி 10 இல் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு தமிழ் செம்மல் விருது  வழங்கியது. உலகத் திருக்குறள் பேரவை-திருக்குறள் நெறித் தொண்டர் விருதை வழங்கி கௌரவித்தது.

உலகத் திருக்குறள் பேரவை குறள் ஞாயிறு என்ற சிறப்பையும் அளித்து பெருமைப்படுத்தியது. குன்றக்குடி அடிகள் –  பெரும்புலவர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தினார்.  தன் வாழ்வின் இறுதி வரை தமிழுக்காக தொண்டாற்றியவர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.