தள்ளாத வயதிலும்  மாநகராட்சி பூங்காவை சுத்தம் செய்து வரும்  இந்தியன் தாத்தா !!

0
1

 

திருச்சி வயலூர்  ரோடு பகுதியில் அமைந்துள்ளது   ராமலிங்க நகர் டவர் பார்க். கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த பூங்கா லாக்டவுன் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டுள்ளது.

 

பூங்கா திறக்கப் பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித  பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட வில்லை .  வாட்டர் ஸ்ப்ரேயர் அமைப்பைச் சுற்றி தேங்கி கிடக்கும் நீரில் இருந்து துர் நாற்றம் வீசுகிறது. பாசன் படிந்த குளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.

 

2

குளத்தில்   தவளைகள் மற்றும் பூச்சிகள் நிறைந்து காணப்படுகிறது. பூங்காவை சுற்றி குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

 

தினமும் காலை பூங்காவை திறந்து வைத்துவிட்டு பராமரிப்பாளர் அங்குள்ள அறையில் தூங்கி ஓய்வெடுக்கிறார்.

 

பூங்கா பராமரிப்பின்றி கிடப்பது குறித்து நடை பயிற்சிக்கு வருபவர்கள் பூங்கா பராமரிப்பாளரிடம் கேட்டால் ” உங்க வேலைய பாருங்க, என்னை கேள்வி கேக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று மிரட்டும் தொனியில் பதில் கூறுகிறார். 

 

இதனையடுத்து பூங்காவிற்கு தினமும் நடைபயிற்சிக்கு வரும் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் பூங்காவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரால் தரையில் அமர்ந்து சுத்தம் செய்ய முடியாத நிலையில் நடைப்யிற்சிக்கு வரும்போதே உட்காந்து கொண்டு சுத்தம் செய்ய ஒரு பழைய பெயிண்ட் டப்பாவையும், கத்தரிக்கோலையும் கையில் எடுத்து வருகிறார்.

தள்ளாத வயதிலும்  கடந்த சில நாட்களாக பூங்காவை தனி ஆளாக சுத்தம் செய்து வரும் இவருக்கு நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.