அரங்கன் கருணையால் உருவான ஸ்ரீரங்கம் மருத்துவமனை

திருவரங்க சரிதம் -1

0
full

 

ராஜகோபுரம் உள்பகுதியில் பல துயரமான விசயங்கள் நடைபெற்றன. சண்டை போடுகிறவர்கள் தங்கி இருந்தார்கள் என்று சொல்லி இருந்தேன், பலர் நல்ல கதையே சொல்ல மாட்டாயா என்று வருத்தப்பட்டனர் .. இன்று கொரோனா பாதிப்பால் மக்கள் துன்புறும் வேளையில் ஒரே ஆதரவான இடம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை ..

இந்த மருத்துவமனை 1871 ஆம் Surgeon-General Balfour ஸ்ரீரங்கம் வந்திருந்து கோவில் அதிகாரிகளியும் ஸ்தலத்தார்களையும் சந்தித்து ஒரு மருத்துவமனை ஆரம்பிக்க நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

poster

இதை ஏற்றுக்கொண்ட கோவில் அதிகாரிகள் வருடம் 300/- ரூபாய் பணம் அளிப்பதாக அவரிடம் அன்றே ஒத்துக்கொண்டனர் .. பின்னர் கோவில் ரெங்கவிலாச மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் (6 june 1872 )அந்த தொகை 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு அளிக்க முடிவெடுக்கப்பட்டது –

ஆம் அன்பர்களே … அப்போதெல்லாம் ஊர் கூட்டம் நடைபெறும் ரெங்க விலாச மண்டபத்தில்….  அதில் இப்படி பல விசயங்கள் ஊர் மக்களிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் !!

இந்த 500 போதாது என்று சொன்ன படியால் அன்று ஸ்ரீரங்கத்தில் இருந்த பெரியவர்கள் ..வேறு எப்படி பணம் சேர்ப்பது என்று நினைத்து  ஸ்ரீரங்கம் முனிசிபாலிட்டி மூலமாக – வீட்டு வரி மற்றும் சில பல வரி உயர்த்துவது மூலம் …. 10th Sepember 1872 நடைபெற்ற அதன்  கூட்டத்தின் மூலம் வருடம் 1200/– அளிக்க ஒப்புதல் அளித்து எப்படியாவது ஸ்ரீரங்கத்தில் ஒரு நவீன மருத்துவமனை அமைக்க ஆதரவு அளித்தனர் ..

இந்த இரு 1500 ரூபாய் பண உறுதிக்கு பிறகு சென்னையில் இருந்த Local fund Board என்கிற அன்றைய மாநில அரசிடம் அதே அளவு 1500 நிதி உதவி கேட்டு 12 12 September 1872 கடிதம் எழுதி அனுப்பினர் ..

half 2

கோவிலில் பணம் அதிகரித்தது ,  முனிசிபாலிட்டி பணத்தை பயன்படுத்துவது … மாநில அரசிடம் நிதி கேட்பது மூன்றையுமே அன்று செய்தனர் .. (அவர்கள் பெயரை என்னால் தற்சமயம் தேடி எடுக்க முடியவில்லை, – ஆனால் படித்து இருக்கிறேன் ) ஊரிலே அன்று ரெண்டு மூன்று குடும்பங்களே இருந்தன இந்த அளவிற்கு செல்வாக்குடன் மெட்ராஸ் பிரேடென்சி அதை உடனே 23 october 1872 G.O.No. 1,446 எண்ணின் கீழ் 1,500 ரூபாய் அளிக்க ஒத்துக்கொண்டது ..

1 January 1873 அன்று ஸ்ரீரங்கம் மருத்துவமனை , திரு . பாலு முதலியார் என்கிற மருத்துவர் தலைமையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் உள் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான ஒரு வீட்டில் துவங்கப்பட்டது .

அந்த வீட்டில் உள்ளே தங்கி வைத்தியம் பார்க்கும் வசதி இல்லாதபடியால் … தற்போது பறந்து விரிந்து இருக்கும் இந்த கோவில் இடத்தில் சில கூரைகள் அமைக்கபட்டது .. அதில் நோயாளிகள் தங்கி இருக்கும்படியாக அமைக்கப்பட்டது. –

அந்த கால வழக்கப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியான வார்டுகள் (அன்றைக்கு 150 வருடம் முன்பு  அதான் வழக்கம் – ரெங்கநாதர் காசு குடுத்தார் என்பதால் அவரே இதை செய்தாரா என்று கீழே கேள்வி கேட்காதீர் )

இன்று காணும் தற்காலத்தில் வளர்ந்து உயர்ந்து இருக்கும் இடத்தில் மார்ச் மாதம் 1874ஆம் ஆண்டு முழுமையாக செயல்பட துவங்கியது ..

1874 ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருந்த தஞ்சாவூர் மகாராஜாவிடம் ஸ்ரீரங்கம் கோவில் காரர்கள் வேண்டிக்கொண்டபடியால் அவர் 2,000/- ரூபாய் இந்த மருத்துவமனைக்கு அளித்து கெட்டி கட்டிடங்கள் கட்ட உதவி செய்தார் ..  அவர் துவங்கி வைத்த உடன் ஸ்ரீரங்கம் மக்கள் பலவாறு பணம் திரட்டி தொடர்ந்து அந்த கெட்டி கட்டிடத்தை 16,500/- ரூபாய் செலவில் 31 March 1878 இல் கட்டி முடித்தனர் ..

ஸ்ரீரங்கம் மருத்துவமனை அன்று தமிழகத்திலே ஒரு முன்னோடி மருத்துவமனையாக திகழ்ந்தது என்று எழுதி இருக்கிறார்கள், காரணம் .. பல வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் இங்கே வந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்றனர் ..

ஸ்ரீரங்கம் மக்கள் இவ்வளவு பிரிமாண்ட மருத்துவமனையை கட்டியதால் திருச்சியை சுற்றி அன்று இருந்த பெரிய கனவான்கள் தங்கள் ஊரிலும் இப்படி ஒரு மருத்துவமனை ஆரம்பிப்பது எப்படி என்று அறிந்து ஸ்ரீரங்கத்து பெரியவர்கள் உதவியுடன் தங்கள் ஊரிலும் மருத்துவமனை ஆரம்பிக்க முயன்றார்கள் .. அதன் முதல் முயற்சியாக  ஸ்ரீரங்கம் மருத்துவமனையின் துணையாக (branch dispensary ) முசிறியில் (இது திருச்சி-சேலம் சாலையில் இருக்கும் ஊர் ) 1876 ஆண்டு ஒரு பழைய வழிப்போக்கர் விடுதியில் (Travellers bungalow ) ஒரு சிறு அறையில் ஆரம்பிக்கப்பட்டது , அதே ஆண்டு அரியலூரில் ஆரம்பிக்கப்பட்டது ..  திருச்சி மாவட்டத்தில் மருத்துவ சேவைகளை தனது ஐநூறு ரூபாய் பணத்துடன் மற்றும் தனது  இடத்தை அளித்து திருவரங்கன் ஆரம்பித்து வைத்து அது பல கிளைகளாக மாறிய கதையை இன்று நீங்கள் அறிந்தீர்கள் ..

half 1

Leave A Reply

Your email address will not be published.