திருச்சியில் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலம் அபகரிப்பு: தொழிலதிபர் கைது

திருச்சியில் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலம் அபகரிப்பு: தொழிலதிபர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடி இடையாற்று மங்கலத்தைச் சேர்ந்த வெங்கட்ராம ஐயர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நான்கு பேர் விலைக்கு வாங்கி இருந்தனர் இதில் 2 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை கடந்த1973ம் ஆண்டு அதே பகுதியைச் குத்தாளத்தம்மாள் என்பவர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் லால்குடி கூகூரைச் சேர்ந்த சிவாஜி மற்றும் பூவாளூர் ராஜா ஆகியோர் போலியாக பத்திரம் தயார் செய்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டதாக குத்தாளத்தம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் நில அபகரிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்து நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, நிலஅபகரிப்பு பிரிவு போலீசார், புரோக்கர் சிவாஜியை கைது செய்தனர். தலைமறைவான தொழிலதிபர் ராஜாவை தேடிவந்தனர். இந்நிலையில் லால்குடியில் தலைமறைவாக இருந்த ராஜாவை நில அபகரிப்பு போலீசார் நேற்று 28/01/2021 கைது செய்தனர்.
