திருச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்:

திருச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்:
திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு வழி செய்யும் வகையில் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் கருவிகள் உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 29.01.2021 அன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் நிதியினைக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் கருவிகளை வாங்கி தங்கள் குழு உறுப்பினர்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இதன் மூலம் உற்பத்தி செலவினை குறைத்து விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
உழவர் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 100 விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், அனைவரும் ஒருங்கிணைந்து சந்தைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் பெற வேண்டும் எனவும், விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கு தேவையான தொழில் நுட்பங்களை வேளாண் துறையிடம் பெற்று அதன் மூலம் அதிக லாபம் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
