மநீம சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை 

0
1 full

மநீம சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை 

மக்கள் நீதி மையம் சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் ”நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் உங்கள் தொகுதி மேம்பாடு பற்றிய சிந்தனைகளை ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் பேசி வீடியோவை 63698 77777 இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தீர்ப்பும் தமிழகத்தை என்ற தலைப்பில் 6 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி திருவரம்பூர் கணேசபுரத்தில் உள்ள மக்கள் நீதி மைய அலுவலகத்திற்கு தபாலிலோ நேரில் சமர்ப்பிக்க வேண்டும். படைப்புகளை பிப்ரவரி 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை நகலை இணைக்க வேண்டும்.  பேச்சுப் போட்டிக்கு ரூபாய் 5 லட்சம் கட்டுரைப் போட்டிக்கு ரூபாய் 5 லட்சம் என பரிசு தொகை 10 லட்சம் வழங்கப்பட உள்ளது.  இந்த போட்டிகளின் மூலம் மக்களிடம் அரசியல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முடியும் என நம்புகிறோம் என மக்கள் நீதி மையம் திருச்சி பொது செயலாளரும் அமைப்பு மற்றும் சார்பு அணிகளின் தலைவருமான முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.